பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விண்ணைத் தொடும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையைத் திமுக அரசு கண்டுகொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசுப் பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைசல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?
திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி ஃபோட்டோஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியை மக்கள் கப்பலேற்றும் நாள் வெகுதூரமில்லை” என்று தெரிவித்துள்ளார்.







