முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தபோது, அமைச்சர் பொன்முடி பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது என குற்றம்சாட்டினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

மேலும் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்காததால், பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, தான் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கட்சிப் பாகுபாடு பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதாக அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் கிராம மக்கள் அடுக்கடுக்காக கேள்விகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர். இதனால் அமைச்சர் பொன்முடி, பாதியில் எழுந்து சென்றார். ஆதிச்சனூர் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு செல்வதாக கூறி கிளம்பி சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

Web Editor

மதுரை விமான நிலைய விரிவாக்கம்-சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

Web Editor

“மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து…. ?” காவலர் உட்பட மூன்று பேர் கைது

Web Editor