தமிழகத்திற்கு வளர்ச்சியை தரக்கூடிய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கும் படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய்வசந்த் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பழவிளை பகுதியிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேட்பாளர் விஜய்வசந்த்க்கு, அங்கு திரண்டிருந்த கட்சியினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தநர். தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய விஜய்வசந்த், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மக்கள் தேர்தலில் வாக்களித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.







