அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய குழு உறுப்பினர்கள் நியமனம்!

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவுக்கு தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தேடல் குழுவின் தலைவராக நியமித்து ஆளுநர்…

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவுக்கு தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தேடல் குழுவின் தலைவராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேடல் குழுவுக்கு ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக, எஸ்.பி.தியாகராஜன் நியமிக்கப்பட்டிருந்தார்.மேலும் மாநில அரசின் பிரதிநிதியாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ராணி சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஜெகதீஷ் குமார் தலைமையிலான தேடல் குழு, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான பணியை ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் துவங்க உள்ளது. கடந்த ஆண்டில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவுக்கும், ஜே.என்.யூ துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரே தலைமை தாங்கினார்.

இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் வரும் 11-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் தேடல் குழு 4 மாத கால அவகாசத்துக்குள் 3 பேரை இறுதி செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.