திருச்செங்கோடு தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் வாக்குறுதி அளித்துள்ளார்.
மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரன் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திருச்செங்கோடு தொகுதியில் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் ஆட்சியாளர்கள் இருந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். மண்ணின் மைந்தனான தன்னை தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால், தொகுதி வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவேன் எனவும் வேட்பாளர் ஈஸ்வர் வாக்குறுதி அளித்தார்.







