சென்னை பெரம்பூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டம் ஒன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ஏன் பெரம்பூரில் முதல் கூட்டம். நாம் துறைமுகத்தில் அமைதியாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தோம். ஆனால் எப்போது கர்ப்பிணி பெண் வயிற்றில் கை வைத்தார்களோ அன்றே முடிவு செய்து விட்டார் தளபதி முதலில் வட சென்னையில் போட்டியிட வேண்டும் என்று.
வட சென்னையில் உருவானது தான் திமுக. விஜய் பெரம்பூரில் நிற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். கொளத்தூர் ,ஆர்.கே நகர் உள்ளிட்ட தொகுதியிலும் அவர் போட்டியிட நாம் விரும்பலாம். வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்கத்தான் விஜய் விரும்புவார்” என்றார்.







