பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது.…

நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு
இலவசமாக தக்காளிகள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய உணவகங்களில் கூட தக்காளியை பயன்படுத்த உணவக உரிமையாளர்கள் யோசித்து
வரும் நிலையில் சாமானிய மக்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக உள்ளது.

இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஜய்
சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவசமாக
பொதுமக்களுக்கு தக்காளி நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு
விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் தாம்பரம் விக்கி தொடங்கி வைத்தார். இதில்
ஏராளமான விஜய் சேதுபதி ரசிகர்கள் கலந்து கொண்டுபொதுமக்களுக்கு தக்காளியை வழங்கினர்.

இதனை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் “கடுமையான விலையேற்றத்தின் காரணமாக சாமானிய மக்களாகிய எங்களுக்கு கடைகளில் தக்காளி வாங்க இயலவில்லை எனவும் ஆகையால் இது போன்ற இலவசமாக எங்களுக்கு தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.  விஜய் சேதுபதி ரசிகர்கள் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகித்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.