மீரா ஜாஸ்மின், மீண்டும் படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்தவர். கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் தன் துறுதுறு நடிப்பு மற்றும் குறுகுறு பார்வையின் மூலம் பிரபலமானார். மேலும் மாதவன் – மீரா ஜாஸ்மின் பெரிதாக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஜோடியாகவும், கொண்டாடப்பட்ட ஜோடியாகவும் மாறியது. இப்படி முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததால், அடுத்ததாக விஜய் உடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா ஆகிய படங்களில் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்தார். ஆனால் இவ்விரு படங்களும் அவருக்கு தோல்விபடங்களாக அமைந்தன. அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இருந்தும் முதல் படம் அளவிற்கு வேறு எந்த படங்களும் கை கொடுக்காத நிலையில், தோல்விகளில் துவண்ட மீரா ஜாஸ்மினுக்கு லிங்குசாமியே, மீண்டும் சண்டைக்கோழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தார். தாவணி போட்ட தீபாவளி பாடல் முழுவதுமே மீரா ஜாஸ்மினின் இளமை ததும்பும் நடிப்பு எல்லோரையும் கவர்ந்திழுத்தது.விஷாலை சுலபமாய் கையாளும் மீரா ஜாஸ்மினின் குறும்புத் தனம் பெருவாரியாக ரசிக்கப்பட்டது.
தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் கலைமாமணி விருது என இளம் வயதிலேயே பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த மீரா ஜாஸ்மின் திடீரெனே திரையுலகில் இருந்து காணாமல் போனார். இவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் அகி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் திடீரென சமூக வலைத்தளங்கள் மூலமாக இவர் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார்.
இந்நிலையில், தற்போது நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மீரா ஜாஸ்மின், மீண்டும் படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.










