வியட்நாம் நாட்டு விமான ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வியாட்நம் விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ‘Duong Tan Hau’ (29). இவர் கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும், கொரோனா தொற்றினை மக்களிடத்தில் பரப்பியதாகவும் வியாட்நம் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வியாட்நம் உள்ள ஹவ் நகரத்தில் நகரத்தில் Duong Tan Hau வசித்துவந்துள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா தொற்றிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 46 பயணிகள் அடங்கிய விமானத்தில் பயணிகளுடன் சேர்ந்து விமானப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த விமான நிர்வாகம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ள காரணத்தால் அவரை கைது செய்தது.

வியாட்நம் நகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2,600 ஆகவும் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 35 ஆகவும் குறைந்து வருகிறது. இந்த சூழலில் தொற்றைப் பரப்பும் விதமான விமான ஊழியரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று வியாட்நம் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.