2027 ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி…? – ரெய்னா சூசகம்…!

ஐபிஎலின் அடுத்த சீசனில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட வாய்ப்புள்ளதாக சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு ஐபில் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 6-ல் வெற்றியும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் சென்னை அணி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் மே 18 ஆம் தேதி ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் சென்னை அணி ப்ளேஆஃப் செல்லும் வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான இப்போட்டிக்கு பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மைதானத்தை சுற்றி வரும்போது தோனியை, முன்னாள் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து ரெய்னா கூறுகையில், தோனியுடன் உரையாடும் போது ​​தான் உடற்தகுதி சார்ந்த சிக்கல்களால் அவதிப்பட்டு வருவதாக தோனி ஒப்புக்கொண்டார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் மீண்டும் விளையாடுவதை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை. தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும், அடுத்த சீசனில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்றும் அவரை ஊக்கப்படுத்தியதாக ரெய்னா கூறியுள்ளார்.

சென்னை அணியின் மூத்த வீரர் தோனி நடப்பு தொடர் தொடங்கும் முன்பே தசைபிடிப்பிற்கு உள்ளானர். இதனால் தொடரின் முதல் 2 வாரத்திற்கு அவர் அணியின் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 13 போட்டிகளாகியும் தோனி களமிறங்காதது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தோனியின் கடைசி சீசன் இது தான் என்றும் அவர் ஐபிஎலில் இருந்து ஓய்வு பெற போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.