சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும்சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சர்வதேச…

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும்
சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், “சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், சரக்கு சேவைகளுக்கான விமானங்களுக்கும், சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்தில் உருமாறிய தொற்று தீவிரமாக பரவிய சூழலில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு, பின்னர் அத்தடை
நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 11,34,05,654 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 25,17,175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் 1,10,79,979 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 1,57,051 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.