அதிமுக தலைவர்கள் மோடியின் முகமூடிகளாகத் தான் உள்ளனர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து மல்லசமுத்திரம் பகுதியில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, அதிமுக தலைவர்கள் மோடியின் முகமூடிகளாகத் தான் உள்ளனர் என்று விமர்சித்தார். வரும் தேர்தலில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும்,ஈஸ்வரன் வெற்றி பெற்றால் புதிதாக திருச்செங்கோடு மாவட்டம் உருவாக்கப்படும் என்றும், மல்லசமுத்திரம் தனி தாலுக்காவாக உருவாக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.







