தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவில் அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக விஜயும், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 போது அமைச்சர்களும் பதவியேற்றனர். மேலும் அண்மையில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழ் நாடு அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது . இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுகிறது. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் பெற உள்ள எம்.எல்.ஏக்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில் “காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான வழக்கறிஞர் ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன் ஆகியோரைத் தமிழக அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; இவர்கள் இருவரும் நாளை அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
59 ஆண்டுகள் எனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் இணையும் இந்தத் தருணம் எங்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்” என்று தெரிவித்துள்ளார்.







