வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஜூலை 4ல் தொடக்கம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 4ம் தேதி முதல் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் முதற்கட்ட பணி ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் – தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி! 

தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த சத்ய பிரதா சாகு, தேர்தலில் வாக்களிக்க, ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க
வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.