மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் – தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, நேற்று…

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஒலிம்பிக் தடகள வீராங்கனை செல்வி ரேவதி மற்றும் சர்வதேச வாலிபால் வீரர் வைஷ்ணவ் ஆகியோர் ஜோதி சுடரினை ஏந்தி வர, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டு ஜோதியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கோப்பையை அறிமுகப்படுத்தி, போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள் : நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….

இதுதொடர்பாக வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் களம் காத்திருக்கிறது, சாதனைகள் பல படைத்திடுங்கள் தமிழ்நாட்டு வீரர்களே எனவும், வெற்றிக் கோப்பைகளுடன், எல்லைகள் கடந்து சாதனைச் சிகரங்களைத் தொடுவதைக் காண ஆவலாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.