வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு…

புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக, அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள மூக்கையன் என்பவர் நடத்தி வந்த தேநீர் கடையில் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருந்ததை கண்டறிந்தனர். மேலும் பட்டியலினத்தவர் கோயிலில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து சிங்கம்மாள் என்பவர் சாமி வந்தது போல் ஆடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி சத்யா இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.