முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காக இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும்  சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பிலும், சிறந்தவீரருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார்பரிசாக வழங்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிகட்டு கமிட்டி துணைதலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரைமாவட்டம் அலங்காநல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா
தைப்பொங்கலையொட்டி ஜனவரி 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு வாடிவாசலில் வர்ணம் பூசும் பணிகளும் பார்வையாளர் மாடம், இரண்டடுக்கு பாதுகாப்பு  போன்றவற்றில் வேலிகள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும்
விழாகமிட்டியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிகட்டு கமிட்டியின்  துணைதலைவர் கோவிந்தராஜ் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது..

ஜல்லிகட்டிற்காக கடந்த ஆண்டை போல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு
தகுதியான ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கபடுவர்.
மேலும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் சுமார் 1000 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்குபெற வாய்ப்புள்ளது. முன்பதிவு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் ஜல்லிகட்டு நாளன்று மீண்டும் மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து களத்தில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் .

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக தங்க காசும், சிறந்த காளைக்கு புதிய கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசும், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு புதிய காரும் பரிசாக வழங்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.ஈ.டி தொலைக்காட்சி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது” என  ஜல்லிகட்டு கமிட்டியின்  துணைதலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்

EZHILARASAN D

வைரலாகும் நீலகிரி கரடிகளின் வீடியோ

குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!

Nandhakumar