“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுகிறார். அப்போது, “ஒரு லிட்டர் பாலை பெறுவதற்கு பசுவின் ரத்தம் 500 லிட்டர் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 8,800 கூட்டுறவு சங்கத்தின் தினந்தோறும் 34 லிட்டர் லட்சம் பால் கொள்முதல் செய்யப்பட்டு தினந்தோறும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 35 ரூபாயும், மாநில ஊக்கத் தொகையாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும், ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த கால அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு போதுமான கவனம் கொள்ளவில்லை. பால் விலையை கொஞ்சம் கூட உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கடந்த அரசு இருந்தது. நிதி நெருக்கடியிலும் இந்த அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தவும், அரசு ஊக்கத்தொகை மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாய் ஆக உயர்த்தவும் ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டர் பாலின் விலை 38 லிருந்து 41 ரூபாய் வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற, எண்ணத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் தொகை 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். 7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும். 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும். 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும். ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பாக வாகனம் வழங்கப்படும். வாகனப்படியாக மாதம்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படும் மாதம் தோறும் அவர்களுக்கு 25000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.