தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி: நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சார்பாக நான் கேட்ட கேட்டதை நிறைவேற்றி தந்த முதலமைச்சரா அவர்களுக்கும் பேரவை தலைவர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்..
அமைச்சர் ராஜ்மோகன்: முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்..
அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
எம்எல்ஏ காமராஜ்: உறுப்பினர்களுக்கு வாகனம் அறிவித்தது அனைத்து சட்டமன்றங்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். முதலமைச்சர் கொடுக்கும் காரில் தான் செல்வதே கெத்து.
பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர்.
அமைச்சர் வன்னியரசு பேசுகையில்,
“வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இன்று முதலைமைசர் அறிவித்துள்ளார். மருத்துவ காப்பீடு ஐந்து லட்சம் முதல் 25 லட்ச ரூபாய் அதிகரித்தது வரவேற்கத்தக்கது. வடசென்னை மக்கள் குளிர்ந்து போகும் அளவிற்கு இந்த திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. மன நிறைவோடு இந்த அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்துள்ளார். பால் கொள்முதல் மற்றும் கார் போன்ற அறிவிப்புகள் சிறப்புமிக்க அறிவிப்பு.
விழுப்புரம் பகுதியில் அதிக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தொடர்ந்து இந்த பிரச்சனைகள் குறித்து மன்றத்தில் பேசியுள்ளார். அதற்கான நிரந்தர முடிவு கிடைக்கவில்லை.
தற்பொழுது முதலமைச்சர் கேட்காமலேயே இந்த மருத்துவ காப்பீடை அதிகரித்துள்ளார். மகத்தான திட்டங்களை முதலமைச்சராக அறிவித்துள்ளார். இதனை விசிக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.




