தமிழ்நாட்டில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் செயல்பட்டு வந்த அருண் ஐபிஎஸ் கடந்த ஜுலை மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், மகேஸ்வரி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது..
இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்-ஐ நியமனம் செய்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஐபிஎஸ் தாம்பரம் ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக வகிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.




