தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கருத்தை தான் பா.ஜ.க. மாநில தலைவர் முருகனும் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு நாளும் தேர்வு நடக்குமா நடக்காதா என்று மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பல்வேறு புதிய திட்டங்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் முதன்முறையாக முதலமைச்சர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கி உள்ளார். முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணியும் நடந்துள்ளது. இதில் தூய்மை பணியாளர்களும் இணைக்கப்பட வேண்டும்.
செங்கல்பட்டு தடுப்பூசி மையம் திறப்பது குறித்து முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அரசு பரிசிலிக்கிறது. டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான விஷயங்களை வலியுறுத் துவேன். இவ்வாறு அவர் கூறினார்.