முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் அறிவுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்கள், உடன் செல்வோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவின் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து மோடி கேட்டறிந்தார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற தடகள வீரர்கள், அவர்களுடன் செல்லும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா சார்பில் 100 தடகள வீர ர்கள் பங்கேற்பதற்கு தகுதி படைத்துள்ளனர். மேலும் 25 தடகள வீர ர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement:

Related posts

“நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்

Saravana Kumar

’தி ஃபேமிலி மேன் 2’ தொடரை நீக்க வேண்டும்: அமேசானுக்கு சீமான் கடிதம்!

Karthick

சுஷாந்த் சிங் மரணம்: மர்மங்கள் நீங்காத ஓராண்டு