முக்கியச் செய்திகள் தமிழகம்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிப்பதே புதிய திராவிட மாடலாக இருக்கலாம் – ஆளுநர் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பது புதிய திராவிட மாடலாக இருக்கலாம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடந்து கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு இப்போது தேவை திராவிட மாடல் ஆட்சி அல்ல புதுச்சேரிக்கு விமான நிலையம் கட்ட 300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கொடுக்கட்டும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும்,  இங்கு திராவிட மாடல் கிடையாது, புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் மீது உண்மையாக அக்கறை இருந்தால் ஏற்கனவே நான் மு.க.ஸ்டாலினை நேரிலும் சரி, தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டிலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் தர கேட்டுள்ளேன். ஆகவே புதுச்சேரிக்கு என்ன வேண்டுமோ அதை தரட்டும் என்றார்.


அத்துடன், புதுச்சேரியில் எந்த அடக்குமுறையும் இல்லை துணை நிலை ஆளுநர் என்ற முறையில் அரசுக்கு துணையாக இருக்கின்றேன் என்ற அவர் ஆளுநர்கள் தலையீடு என
சொல்கின்றார்கள். ஆள் ஆளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட ஆளுநர்
தலையீடு இருப்பது ஒன்றும் பெரிதல்ல என கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரிக்கு  வந்து பேசியது எதுமே சரி கிடையாது. புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெறுகின்றது என்று ஸ்டாலின் சொன்னார். உண்மைதான் அது புதுச்சேரியில் இல்லை கர்நாடாகாவில் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.


திராவிட மாடல் என்று சொல்கின்றார் ஸ்டாலின் கலைஞரின் மகன் என்று பெருமையுடன் சொல்லும் ஸ்டாலின் திராவிட மாடல் என்பதை தமிழில் பெயர் வைக்கட்டும் என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் அது தான் புது மாடலோ என்னவோ நாங்கலெல்லாம் 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளோம் வாரிசு இல்லாமல் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Halley Karthik

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

G SaravanaKumar

“எண்ணும் எழுத்தும்” திட்டம் நாளை துவக்கம்

Arivazhagan Chinnasamy