முக்கியச் செய்திகள் இந்தியா

“பாஜக அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் கைப்பற்ற முடியாது”- உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்தியாவில் இன்று பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக அரசு இருக்கும் வரை யாராலும் ஒரு அங்குலம் நிலத்தைக்கூட கைப்பற்ற முடியது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்கவில்லை. இந்த செயலை கண்டிக்கிறேன். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தவாங் எல்லை பகுதியில் நடந்த இந்திய-சீன மோதல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறது. நமது அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது. டிசம்பர் 8ம் தேதி மற்றும் 9ம் தேதி இடைப்பட்ட இரவில் அருணாச்சல பிரதேசத்தில் நமது இந்திய ராணுவ வீரர்கள் காட்டிய வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.கேள்வி நேரப் பட்டியலைப் பார்த்தேன், கேள்வி எண் 5ஐப் பார்த்ததும் காங்கிரஸின் பதட்டம் எனக்குப் புரிந்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (ஆர்ஜிஎஃப்) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எஃப்சிஆர்ஏ) உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்வி.

அவர்கள் அனுமதித்திருந்தால், 2005-2007ல் சீனத் தூதரகத்தில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி மானியம் கிடைத்தது என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருப்பேன். இது எஃப்சிஆர்ஏ-வின்படி ஏற்புடையதல்ல. எனவே விதிகளின்படி, உள்துறை அமைச்சகம் அதன் பதிவை ரத்து செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஞானதேசிகன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

Jeba Arul Robinson

கோவையில் கனமழை; நீரில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்

Arivazhagan Chinnasamy

அண்ணாமலை கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Web Editor