முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்ட் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. நீர் நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ளவர்களை மீட்க முடியாமல் மீட்புக் குழுவினர் தவித்து வருகின்றனர்.

மழையால் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கி, நேபாளத் தொழிலாளர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

‘பல்வேறு பகுதிகளில் வீடுகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகளில் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. நிலைமை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

வெள்ளப் பாதிப்புகளை அவர் விமானம் மூலம் ஆய்வு செய்தார். அந்த மாநிலத்தில் 200 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு முகாந்திரமில்லை: ஓபிஎஸ்

Ezhilarasan

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

Vandhana

அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது – ஜான் பாண்டியன்

Gayathri Venkatesan