முக்கியச் செய்திகள் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் விலகல், கேப்டன் ஆனார் விஜய் சங்கர்

காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் விலகியதால், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில தேர்வுக் குழு ,கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. இதில் தமிழ்நாடு அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைக்கேப்டனாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

விஜய் சங்கர்

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் முழங்காலில் காயமடைந்தார். அவர் இன்னும் குணமடையாததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால், விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ட்விட்டரில் நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

Jeba Arul Robinson

அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை: முதல்வர் பழனிசாமி

Saravana

மத்திய முன்னாள் அமைச்சர் அஜித் சிங் காலமானார்

Halley karthi