முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

’ஆர்யன் வர்ற வரைக்கும் வீட்ல ஸ்வீட் கிடையாது’: ஷாருக் மனைவி உத்தரவு

சிறையில் இருக்கும் ஆர்யன் கான் வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டில் இனிப்பு வகைகளை சமைக்கக் கூடாது என்று ஷாருக்கான் மனைவி கவுரி கான் உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த 2 ஆம் தேதி சொகுசு கப்பல் ஒன்று சென்றது. அதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த விருந்தில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

கவுரி கானுடன் ஆர்யன் கான்

கைதானவர்களிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிந்து ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை மும்பை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருக்கும் ஆர்யன் கான், சிறைச்சாலை கேண்டீனில் செலவு செய்வதற்காக 4,500 ரூபாயை ஷாருக்கான் மணியார்டர் அனுப்பி இருந்தார். இதற்கிடையே, ஆர்யன் கான் சிறைக்கு சென்றதில் இருந்து அவர் தாய் கவுரி கான் கண்ணீர் விட்டபடி கவலையில் இருப்பதாகவும் மகனை ஜாமீன் எடுக்க கடும் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் மும்பை சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஷாருக்கானின் ’மன்னட்’ பங்களா

ஆர்யன் கான் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வீட்டில் இனிப்பு பண்டங்களை சமைக்க வேண்டாம் என்று வீட்டின் கவுரி கான் சமையல்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement:
SHARE

Related posts

பயணிகள் வருகை குறைவு: ஜூன் 16 வரை மேலும் சில ரயில்கள் ரத்து!

Halley karthi

காதலியை காண மணப்பெண்போல் வேடம் அணிந்த காதலுனுக்கு அடி உதை!

Saravana Kumar

எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி

Saravana