முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு – ரூ. 7.74 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2,601 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிடமிருந்து 1,975 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 7,74,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் செப்டம்பர் 14 முதல் 21ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 272 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடமிருந்து 11 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளைக் கொட்டிய பொதுமக்களுக்கு ரூ. 3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 245 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 30 கடை உரிமையாளர்களிடம் இருந்து 3 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 3,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

EZHILARASAN D

குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!

Jeba Arul Robinson

தமிழகத்தில் கலவரங்கள்: காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – ஈஸ்வரன்

Web Editor