19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது.
ஐதராபாத் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) கண்டு 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டத்தில் குஜராத்தும், ஒரு ஆட்டத்தில் ஐதராபாத்தும் வென்றுள்ளன.







