முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா செய்திகள்

அமெரிக்காவில் வேலையை காட்டும் டெல்டா வகை கொரோனா

அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகின் மூலை முடுக்கெல்லாம் நுழைந்து மக்களை மிரட்டி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தடுமாறின. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தத் தொற்று புதிதாக உருமாறிக் கொண்டே இருப்பதால், மருத்துவ உலகுக்கும் இந்தத் தொற்று பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதால் உலக நாடுகள் அதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா, இப்போது உலக நாடுகளிலும் பரவியுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏழு நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு 13,859 ஆக உள்ளது. முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது இது, 21% அதிகம் என்று நோய் அமெரிக்க தடுப்பு மையம் தெரிவித் துள்ளது.

முந்தைய கொரோனா வகைகளை விட டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகிறது. உலகிலேயே அதிக தடுப்பூசிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா இருந்தும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி பணிகளின் வேகம் குறைய தொடங்கி இருக்கிறது. அங்கு டெல்டா வகை கொரோனா அதிகரிக்க இதுவும் காரணமெனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேகமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ மத்திய அரசு உத்தரவு!

Halley karthi

மகாராஷ்டிராவில் சுற்றுலா தலமாக மாறும் சிறைச்சாலைகள்!

Jayapriya

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி வாயிலாக 3வது அலையை தடுக்கலாம்: பிரதமர் நரேந்திரமோடி

Ezhilarasan