முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜார்ஜ் கோட்டையை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சட்டப்பேரவை நிகழ்வுகள் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவை வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகத்தினர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த வாய்ப்பிருக்குமா என்ற எதிர்பார்ப்பு மூத்த அமைச்சர்களிடையே எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பெரிய கருப்பன் ஆகியோர் பேரவை வளாகத்தை பார்வையிட்டனர். பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ படத்தை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பிறப்பித்த உத்தரவில், தலைவராக அமைச்சர் பொன்முடி, துணைத் தலைவராக ராமசாமி, உறுப்பினர்களாக பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பணிவழி உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உயர்கல்வி செயலாளர், யூசிஜி செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் ஆளுநரின் செயலாளரை நியமித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan

நடிகைக்கு முத்தமிட்ட ஜெனிலியா கணவர்; வைரலாகும் வீடியோ

Saravana Kumar

மூன்றாவது அணி பாஜகவை பலவீனப்படுத்தாது: எல்.முருகன்

Niruban Chakkaaravarthi