ஊரடங்கு முடியும்வரை, பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

முழு ஊரடங்கு முடியும்வரை, மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வீட்டிலிருந்தே பணி புரிவதாலும்,…

முழு ஊரடங்கு முடியும்வரை, மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வீட்டிலிருந்தே பணி புரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடப்பதாலும் மின்தடை ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருவதாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பாரமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.