முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 48 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணமடைந்து 32 ஆயிரத்து 263 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 18 லட்சத்து 34 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் களில், 483 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். 4463 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி யுள்ளனர். செங்கல்பட்டில் 996 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 527 பேருக்கும் திருவள்ளூரில் 735 பேருக்கும் திருச்சியில் 882 பேருக்கும் கோவையில் 3061 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

என்ன நடக்கிறது லட்சத்தீவில்?

அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!

Vandhana

ஆக்சிஜன் பற்றாக்குறை: காவல்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Karthick