முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு – வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட…

சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்,  வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ஹெலிகாப்டர் மூலம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை பார்வையிட்டார்.  அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,  தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதையும் படியுங்கள் : சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!

அதன் பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது அவரிடம் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.