திட்டமிட்டபடி விடுதலை 2 திரைப்படம் வெளியாகுமா?

பனி மற்றும் இதர காரணங்களால் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.  வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக்…

பனி மற்றும் இதர காரணங்களால் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியாகி விமர்சனங்களை பெற்றாலும் வசூல்ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. அதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு திண்டுக்கல் சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் எதிரொலி – புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி நேரில் ஆய்வு!

மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு
செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், பனி மற்றும் இதர காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.