5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் ஒடிசாவை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரத்தில் வலு பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மற்றும் ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதேபோல் கிழக்கு ராஜஸ்தான், கிழக்கு மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா, கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிறைய எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் ஜூலை 7ம் தேதி வரை குஜராத், கோவா, கொங்கன் பகுதிகளில் அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.