பேருந்து, ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை அமைத்திட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி, வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காணொலி வாயிலாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாடு முழுவதும் 18 வயதை கடந்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 38 சதவீதம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில. தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொரோனா இரண்டாம் அலை இன்னும் நிறைவடையவில்லை என்பதால், தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதேவேளையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில. கொரோனா தடுப்பூசி மையங்களைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஏனெனில் சிங்கப்பூர், பிரிட்டன், ரஷ்யா மற்றும் சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் மத்திய சுகாதாலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.







