முக்கியச் செய்திகள் மழை

தடம்புரண்டது கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கண்ணூர்-பெங்களூரு விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருந்து கோவை, சேலம், தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் அதிகாலை தருமபுரி ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், அதிகாலை 3.50 மணிக்கு தருமபுரி அருகே உள்ள வே.முத்தம்பட்டி வனப்பகுதிக்கு வந்தபோது, ரயில் தண்டவாளத்தில் சரிந்துள்ள பாறை கற்களில் உரசி எஞ்சின் மற்றும் 2 பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் கற்கள் சரிந்து விழுந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலையா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

Saravana Kumar

திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் ராஜு

Niruban Chakkaaravarthi

தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

Ezhilarasan