முக்கியச் செய்திகள் இந்தியா

கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

உரங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் மாதத்திற்கான உரங்களின் உற்பத்தி குறித்து அதிகாரிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை எனவும், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுவதை மறுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நவம்பர் மாதத்தில் தேவைப்படும் யூரியாவின் அளவு என்பது 41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், 76 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும் என்ற அமைச்சர் , உரத்தட்டுப்பாடு என்னும் வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றும், உரங்களை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளையில், உர தட்டுப்பாடு நிலவுவதாக வதந்திகளை பரப்பிவிட்டு கள்ள சந்தையில் அதிக விலைக்கு உரங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். நாட்டில் உர உற்பத்தி மற்றும் வினியோகத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விவசாயிகளுக்கு போதுமான அளவு உரம் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓசூரில் பெய்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் மக்கள்

G SaravanaKumar

கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை சீல் அகற்றம்

G SaravanaKumar

ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சுப்பையா கைது

Arivazhagan Chinnasamy