முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் ஆடிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

உத்தரப்பிரதேசம் – தமிழ்நாடு இடையே நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது வீரர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கூட்டத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உற்சாகத்துடன் கண்டுகளித்த அவர், கைதட்டி தமிழக கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான உறவு மிகவும் பழமைவாய்ந்த ஒன்று என்றும், அது பிரதமர் மோடியால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இரு மாநில கலாச்சாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீரர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மைதானத்தில் வீரர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா

EZHILARASAN D

சிங்கப்பூரில் இருந்து ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் வந்த ஆக்சிஜன்!

Halley Karthik

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

EZHILARASAN D