கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்தண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014ஆம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசையில் உருவான இப்படத்தின் பிஜிஎம், இன்றும் பலரது ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு அங்கமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். இந்நிலையில் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், புல்லரிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.