GOLD RATE | தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.