மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். தொழில் துறையினருக்கு விமான நிலையம் விரிவாக்கம் பயனுள்ளதாக அமையும். மதுரை விமான நிலையத்தை வைத்து பல கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
வாக்கு வங்கிக்காக திமுக அரசு மத்திய அரசுக்கு எதிராக பரப்புரை செய்து வருகிறார். சிலிண்டர் தட்டுப்பாடு என மக்களிடம் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தக் கூடாது. சிலிண்டர் தட்டுபாடின்றி மக்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கூட்டணிக்கு யாரை அழைப்பது, யாரிடம் பேசுவது என எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும், அனைத்து முடிவுகளை அவர் எடுப்பார்.
திமுக நேரத்திற்கு தகுந்தாற்போல இரட்டை வேடம் போடும். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். தெளிந்த நீரோடை போல தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அமர வைப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.







