முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் நிருவனம் சார்பில் அமைக்கபட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு நிமிடத்துக்கு 87 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கூடிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அமைச்சர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செங்கல்பட்டு அல்லது குன்னூரில் உள்ள 113 ஆண்டு முன்னர் தொடங்கப்பட்ட தடுப்பூசி தொழிற்சாலையை, தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில் மாநில அரசு உற்பத்தியை தொடங்கும் ஆனால் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும், மத்திய அரசு தடுப்பூசி தட்டுபாட்டை உண்ர்ந்திருக்கிறது அதற்காக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனால் போராட்டம் நடத்த வேண்டியதில்லை என்றார்.

Advertisement:

Related posts

என்ன நடக்கிறது பள்ளிக் கல்வித்துறையில்?

கொல்கத்தா அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

Saravana Kumar

கொரோனா பணிகளில் பயிற்சி மருத்துவர்கள்!