தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவை தொடர்ந்து தவெக பெரும்பான்மை பெற்றது.
இதனையடுத்து தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
அதன் படி இன்று சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும் தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய், முன்மொழிந்தார்.
அப்போது அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார் குடி எம்.எல்.ஏ காமராஜும் தவெக அரசிற்கு ஆதரவு அளித்தார். அவர் பேசியதாவது ;
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் தவெக அரசுக்கு நேற்றும் ஆதரவு தெரிவித்தேன், இன்றும் தெரிவிக்கிறேன், நாளையும் தெரிவிப்பேன். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக ஒரு இயக்கத்தில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டேன். தமிழ்நாடு மக்கள் அனைவரையும் காப்பாற்றும் முதலமைச்சர் விஜய், என்னை காப்பாற்ற மாட்டாரா? முதலமைச்சராக விஜய் பதவியேற்ற 4 நாள்களில் திருச்சியில் ஒரே நாளில் 300 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நேற்று முதலமைச்சர் விஜயை ஆதரித்து பேசியதற்காக மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பபிடத்தக்கது.







