பட்ஜெட்: இதுவரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா?

1947 முதல் கடந்த ஆண்டு வரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும்…

1947 முதல் கடந்த ஆண்டு வரை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது.

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதற்காக எதிர்பார்ப்பு தற்போதே எகிறத் தொடங்கிவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு பாதுகாப்புத் துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நிதியும் செலவிட்டது.

சுதந்திரம் அடைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட 1947-48 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 92.74 கோடி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு 1950-51 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 168 கோடி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1960-61 ஆம் நிதியாண்டில் ரூ. 272.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் ஆகும்.

1980-81 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 3,425 கோடியும் (ஜிடிபியில் 3.13 %), 2000-2001ஆம் நிதியாண்டில் ரூ. 58,587 கோடியும் (ஜிடிபியில் 2.95 %) ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் (2020-21) ரூ.4,71,378 கோடி ஒதுக்கப்பட்டது. இது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2.1 சதவிகிதம் ஆகும். அதாவது, கடந்த 20 வருடங்களில் பாதுகாப்புக்கு செலவிடும் நிதியின் (பென்சனை தவிர்த்து) அளவு 475 % அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply