29.4 C
Chennai
September 30, 2023
ஆசிரியர் தேர்வு தமிழகம்

கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயி என்பதில் தான் பெருமை அடைவதாக கூறினார். விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதை அதிமுக அரசு உறுதி செய்துள்ளதாக கூறிய அவர், அதிமுக அரசு முத்தரையர் சமூகத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த அவர், வலையர் நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி தெரிவித்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கர்பிணிகளுக்கான உதவி தொகையை அதிகரித்து வழங்கியுள்ளதால், கருவில் வளரும் குழந்தைக்கு கூட இரட்டை இலையை பிடிக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply