பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோது பெட்ரோல் விலை உயர்வு ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களின் விலையை தீர்மானிப்பதாகவும், விலை உயர்வில் மத்திய அரசுக்கு பங்கில்லை என்றும் கூறினார்.
விலையைக் குறைக்க மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.