ரஷ்யாவின் தெருக்களில் உலா வரும் நீல நிற நாய்கள்!

ரஷ்யாவின் டிஷெர்சிங் பகுதியில் தெருக்களில் நீல நிற நாய்களை கண்ட மக்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த நாய்களின் முடி நீல நிறத்தில் உள்ளன. இதனிடையே அங்கு வசிக்கும்…

ரஷ்யாவின் டிஷெர்சிங் பகுதியில் தெருக்களில் நீல நிற நாய்களை கண்ட மக்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நாய்களின் முடி நீல நிறத்தில் உள்ளன. இதனிடையே அங்கு வசிக்கும் சிலர் தெரிவித்த தகவலின் படி அங்கு 6 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட ஓர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன கழிவுகளால் தான் நாய்களின் முடி நீல நிறத்தில் மாறியதாக குற்றம் சாட்டுகின்றனர். இதை மறுத்த தொழிற்சாலையின் மேளாலர், இதை யாரேனும் கேலிக்காக செய்திருக்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில், உள்ளூர் அதிகாரிகள் நீல நிற நாய்கள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று அவைகளை பிடித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.