மதுரை அருகே பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் பாலமுருகனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சோழவந்தானை சேர்ந்த பாலமுருகனின் சகோதரி மகன் தீபன் சக்கரவர்த்தி, கேட்டு வந்துள்ளார்.
ஆனால், பாலமுருகனின் மகளோ தீபன் சக்கரவர்த்தியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து செல்லூர் காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.








